Latestமலேசியா

RM200,000 போலி பணக் கோரிக்கை; நிறுவன உரிமையாளரை சபா MACC கைது

கோத்தா கினபாலு, ஜூலை 30 – சபாவில் இரண்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு வேலைகளுக்கு 200,000 ரிங்கிட் போலி பணக் கோரிக்கை ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரை எம்.ஏ.சி.சி அதிகாரிகள் கைது செய்தனர். 60 வயதுடைய அந்த ஆடவர் நேற்று காலை மணி 9 அளவில் Tawau விலுள்ள MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக Macc க்கு நெருக்கமான தகவல்கள் மூலம் தெரியவருகிறது. கடந்த 2020 ஆண்டில் அந்த நபர் இதற்கான இந்த போலி வங்கி பணக் கோரிக்கையை சமர்ப்பித்தாக தெரிகிறது.

மேலும் அந்நபர் அந்த பணக் கோரிக்கைக்கான போலியான வங்கி கணக்கறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார். துரித பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சபா மாநிலத்திலுள்ள இரண்டு பள்ளிகளில் பழுது பார்க்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான போலி பணக் கோரிக்கையை அந்த ஆடவர் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது. அந்த நபர் கைது செய்யப்பட்டதை சபா MACC தலைவர் டத்தோ S . கருணாநிதி உறுதிப்படுத்தியதோடு தண்டனை சட்டத்தின் 417 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!