Latestமலேசியா

RM200,000 மதிப்புள்ள ஆமைகளின் உலர்ந்த இறைச்சி மற்றும் ஓடுகள்; கூடாட்டில் மலேசிய கடல் பாதுகாப்பு நிறுவனம் பறிமுதல்

கூடாட், ஜூலை 10 – 200,000 ரிங்கிட் மதிப்புள்ள ஆமையின் உலர்ந்த இறைச்சி மற்றும் அதன் ஓடுகளை கூடாட் கடல் பகுதியில் கடத்தும் முயற்சியை   மலேசிய கடல்   நிறுவனத்தின்  அமலாக்க  அதிகாரிகள் முறியடித்தனர்.  கூடாட்   Tanjung  Kalutan  கடலோர பகுதியில்  சந்தேகத்திற்குரிய   படகு காணப்பட்டதை தொடர்ந்து  கடல் நிறுவனத்தின் அமலாக்க   அதிகாரிகள்  அதனை தடுத்து நிறுத்தும்  முயற்சியில் ஈடுபட்டபோது  அந்த படகில் இருந்த சந்தேகப் பேர்வழி  கடல் சேற்று பகுதியில் குதித்து  தப்பியோடினான்.  

அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் 23 மூட்டைகளில் இருந்த ஆமைகளின் 160 கிலோ உலர்ந்த இறைச்சி மற்றும்  52  மூட்டைகளில் இருந்த    500 கிலோ ஆமை ஓடுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக   மலேசிய கடல் நிறுவன கமாண்டர்    Maurice Grenville Abeyeratne   தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்கள் அனைத்தும் மலேசிய கடல்  நிறுவன  விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக  அவர்  கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!