Latestமலேசியா

RM381 மில்லியன் குத்தகையில் கையூட்டு பெற்ற ஹம்சாவின், முன்னாள் அரசியல் செயலாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 23 – அரசாங்க குத்தகையை வழங்க கையூட்டு வாங்கியதாக,  முன்னாள் உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainuddinனின், முன்னாள் அரசியல் செயலாளரான Sayed Amir Muzzakkir Al Sayed Mohamadனுக்கு எதிராக, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அமீர் விசாரணை கோரினார்.

போலீஸ் படைக்கு உபகரணங்களை விநியோகிக்கும் அரசாங்க குத்தகையை வழங்குவதற்கு பதிலாக, மொத்தம் மூன்று லட்சத்து 50 ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக இரு குற்றச்சாட்டுகள் அமீர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

RM381 million ரிங்கிட் பெருமானமுள்ள அந்த குத்தகையை வழங்க, டிசம்பர் நான்காம் தேதி, ஒரு லட்சம் ரிங்கிட்டையும், அதே மாதம் 16-ஆம் தேதி, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டையும் கையூட்டாக பெற்றதாக

அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Nexus குழுமத்திடமிருந்து அவர் அந்த கையூட்டை பெற்றதாக கூறப்படுகிறது.

60 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அமீர் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூலை 12-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!