
மலாக்கா, ஜூன் 25 – 5 ரிங்கிட் பணத்தையும், ‘மீ கோரெங்கையும்’ கொடுத்து 8 மற்றும் 10 வயதுடைய இரு பள்ளி மாணவிகளை ஏமாற்றி, பள்ளிவாசல் அறையில் பாலியல் தொந்தரவு செய்த 73 வயோதிகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவிகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த ஆசிரியர் விசாரித்த போது , அவர்கள் சம்பவத்தைத் தெரிவித்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அக்குற்றவாளி, பள்ளி முடிந்த பிறகு பெற்றோருக்காக காத்திருந்த மாணவிகளை பணமும் உணவும் கொடுத்து கவர்ந்து, கடந்த ஜூன் 16 முதல் சுமார் இரண்டு வாரங்களாக பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக நம்பப்படுகிறது. இதை யாரிடமும் கூற வேண்டாம் எனவும் அவன் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக ஆடவன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். அதே வேளை, கற்பழிப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.



