Latestமலேசியா

‘Rocky’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது வியாழக்கிழமை கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளான், ஆகஸ்ட்-18-போர்ட் கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 24 வயது இளைஞர் ஒருவர் வரும் வியாழக்கிழமை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.

​ஷா ஹிஸாம் (Shah Hizam) என்ற அந்த இளைஞருக்குக் கால்நடை மருத்துவச் சேவைத் துறை நீதிமன்ற அழைப்பாணை விடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

​வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள நிலையில், அவர் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

​ஜூலை 29-ஆம் தேதி கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK-வின் நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பொது மக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனினும், ​விலங்குகளைத் துன்புறுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், குடியிருப்பாளர் பிரதிநிதியாகவே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் முன்னதாக விளக்கமளித்திருந்தார்.

​இச்சம்பவம் குறித்து 2015-ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விலங்கு வதை தடுப்புப் பிரிவில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!