RTM-மில் உலகக் கிண்ணம் 2026; அனைத்து 104 ஆட்டங்களும் இலவச நேரலை

கோலாலம்பூர், ஜூன்-10-உலகக் கால்பந்து இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ‘FIFA உலகக் கிண்ணம் 2026’ கால்பந்து திருவிழாவின் அனைத்து 104 ஆட்டங்களையும், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான Unifi TV மற்றும் RTM மூலம் மலேசியர்கள் முற்றிலும் இலவசமாகக் காணலாம்.
இந்த நேரடி ஒளிபரப்பை நீங்கள் MYTV தளத்தில் உள்ள TV Okey, Sukan+ அலைவரிசைகளிலும், Unifi TV செயலி மூலமும் கண்டு மகிழலாம்.
அதுமட்டுமின்றி, பயணங்களின்போது ஆட்டங்களைத் தவறவிடாமல் இருக்க, RTMKlik செயலியை உங்கள் கைப்பேசி, மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து கணக்கு ஏதும் இல்லாமலேயே இலவசமாக நேரலையில் பார்க்கலாம்.
இரசிகர்களுக்குக் கூடுதல் சிறப்பம்சமாக, இந்தப் போட்டிகள் அனைத்தும் அதிநவீன HD தரத்தில், மலாய் மற்றும் ஆங்கில வர்ணனையுடன் ஒளிபரப்பப்படவுள்ளன.
அதோடு, ஆட்டங்களுக்கு முந்தைய அலசல், தினசரி சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் RTM வழங்குகிறது.
உடனுக்குடன் ஆட்டங்களின் அட்டவணையைத் தெரிந்துகொள்ள RTM அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையோ அல்லது Sukan TV RTM சமூக ஊடகப் பக்கங்களையோ பின்தொடருங்கள்.



