Latestமலேசியா

Shuhailyக்கு எதிரான 2015-ஆம் ஆண்டு புகாரை மறுஆய்வு செய்ய அட்டர்னி ஜெனரலிடம் முன்னாள் காவல் வீரர் கோரிக்கை

கோலாலம்பூர், அக்-28-மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPSசின் தலைமை இயக்குநர் Shuhaily Zain தம்மைத் தாக்கியதாகக் கூறி, 2015-ஆம் ஆண்டு தாம் அளித்த காவல்துறை புகாரை மறுஆய்வு செய்யுமாறு முன்னாள் காவல் வீரர் ஒருவர் தேசிய சட்டத்துறைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்காலகட்டத்தில் Hilir Perak மாவட்டக் காவல்துறைத் தலைவராக இருந்த Shuhaily மீது அப்புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என Saifuddin Abdul Kader எனும் அக்காவல் வீரரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். Shuhailyக்கு எதிராகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தங்கள் கட்சிக்காரர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இறுதியில் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

Shuhailyயின் கார் காவல் சாவடியொன்றைக் கடந்து சென்றபோது முறையாக மரியாதை செலுத்தத் தவறியதாகக் கூறி அவர் தம்மைத் திட்டியதாகவும் இடது தோளில் அடித்ததாகவும் Saifuddin புகார் அளித்திருந்தார். அதோடு தம்மை சபா அல்லது சரவாக்கிற்கு இடமாற்றம் செய்துவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் Saifuddin குறிப்பிட்டிருந்தார்.

இரு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுவது தொடர்பில், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி Shuhaily மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு செய்யப்பட்ட புகாரிலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக Saifuddinனின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சட்டம் பாகுபாடின்றி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய, அப்புகாரை மறுஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!