கோலாலம்பூர், ஜூன் 20 – SPM தேர்வெழுதிய மாணவர்கள், நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் மேற்கல்வியை தொடர செய்திருந்த விண்ணப்பத்தின் முடிவு, இம்மாதம் 28-ஆம் தேதி வெளியிடப்படும்.
அரசாங்க பொது பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள், சமூக கல்லூரிகள் உட்பட ILKA எனப்படும் திறன் பயிற்சி கழகங்களுக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்கள், இம்மாதம் 28-ஆம் தேதி, நண்பகல் மணி 12 முதல் ஜூலை ஏழாம் தேதி மாலை மணி ஐந்து வரையில், தங்கள் முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பொது பல்கலைக்கழகங்களின் அகப்பக்கங்கள் வாயிலாகவோ அல்லது விவேக கைப்பேசியில், UPUPocket செயலியை பதிவிறக்கம் செய்துக் கொண்டே மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
விண்ணம் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு, இம்மாதம் 29-ஆம் தேதி முதல் ஜூலை ஏழாம் தேதி வரையில், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட உயர்கல்விக்கூடங்கள் அல்லது திறன் பயிற்சி மையங்கள் அந்த அங்கீகார கடிதங்களை வெளியிடும்.
விண்ணம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள், UPU வாயிலாக, இம்மாதம் 28-ஆம் தேதி நண்பகல் மணி 12 முதல் ஜூலை ஏழாம் தேதி மாலை மணி ஐந்து வரை, மேல்முறையீடு செய்யலாம்