Latestமலேசியா

கிள்ளானில் 12 வயது சிறுமி கடத்தல்; நால்வருக்கு 3 ஆண்டுகள் சிறை

கிள்ளான், நவம்பர்-5 – அக்டோபர் 8-ஆம் தேதி கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் 12 வயது சிறுமியை கடத்தியக் குற்றத்திற்காக, 4 பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நால்வரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கிள்ளான் உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட 18 வயது Alya Zahwa Salim, 18 வயது Putri Nurul Suhaila Abdullah, 23 வயது Muhammad Asran Ghazalie, 20 வயது Muhammad Adha Abdullah ஆகியோர், அக்டோபர் 8-ம் நாள் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி 1ல் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து உணவை எடுப்பதற்காகத் தனியாகச் சென்ற போது, அச்சிறுமி காணாமல் போனார்.

அக்கடத்தல் கும்பலால் மானபங்கப்படுத்தப்பட்டதோடு, தலைநகரில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்கப்படும் நிலையில் அச்சிறுமி மீட்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!