
கெடா, ஜனவரி 16 – கடந்த ஜனவரி 5ஆம் திகதி, தேசிய வகை ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சிறுவர் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘கடைசி வீடும் பயங்கரமான சத்தமும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியீடு கண்டுள்ளது.
இப்பள்ளி மாணவர்களுக்கு நாடறிந்த எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்கள் சிறுவர் சிறுகதை எழுதும் பட்டறையை வழிநடத்தினார்.
இதில், சிறுகதை எழுதுவதற்கான நுட்பங்களும் முறைகளும் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போட்டியில், மாணவர்கள் தங்களுடைய கற்பனைத்திறனையும் திறமைகளையும் வெளிப்படுத்தி சிறுகதைகளை உருவாக்கியதோடு, வெற்றி பெற்ற சிறுகதைகளை பாலமுருகன் அவர்களே முறையாகத் தொகுத்து நூலாக்கினார்.
இந்த நூல்களை பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவையினரால் அருகிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழா, கடாரத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றில் முதல் முறையாக சிறுவர் சிறுகதை நூலின் வெளியீடாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.