
புத்ராஜெயா, பிப்ரவரி-4-குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் போலி வழக்கறிஞர் வாதாடியது அம்பலமானதை அடுத்து, ஒரு போதைப்பொருள் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
48 வயது Muhammad Zarif Mohd Noor Ajala மற்றும் 38 வயது Mohd Najmi Abd Rahim இருவரும் 769 கிராம் methamphetamine கடத்தல் குற்றத்திற்காக உயர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் Najmi, 13 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கூடுதல் தண்டனை பெற்றிருந்தார்.
ஆனால் நேற்று கூடிய மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த வழக்கு “சட்ட ரீதியாக செல்லாத ஒன்று” என அறிவித்தது.
Najib சார்பாக வழக்கறிஞராக வாதாடியவர் உண்மையில் சட்டத் தொழில் சட்டத்தின் கீழ் தகுதியற்றவர் என்பதை நீதிபதி காரணம் காட்டினார்.
எனவே, விதிக்கப்பட்ட தண்டனைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.இப்போது வழக்கு மீண்டும் சிரம்பான் உயர் நீதிமன்றத்திற்கே திரும்புகிறது. பிப்ரவரி 24-ஆம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கும்.என்றாலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தொடர்ந்து காவலில் இருக்கின்றனர்.



