
மியாமி, மே 6- கடந்த சனிக்கிழமை, மியாமி கடற்கரையில், டெக்னோமர் லம்போர்ஜினி (Lamborghini Tecnomar) சொகுசு கப்பல், பகுதியளவு கடலில் மூழ்கும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில் அதிலிருந்த 32 பேர் மீட்கப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் பரவிய அக்காணொளியில், பயணிகள், மூழ்கும் கப்பலின் மேல் உயிர்காக்கும் கவசங்களை அணிந்து கொண்டு நிற்பதைக் காண முடிகிறது.
மீட்கப்பட்ட அனைவ்ருக்கும் காயம் ஏற்படவில்லையென்று கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது.