Latestமலேசியா

கூலாயில் துயரம்; நெடுஞ்சாலையில் உதவி செய்யச் சென்ற பாகிஸ்தானிய ஆடவர் லாரி மோதி பலி

கூலாய், நவம்பர்-23,ஜோகூர், கூலாயில் வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் ஓட்டுநருக்கு உதவச் சென்ற பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர், லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

41 வயது அவ்வாடவர், பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ACP தான் செங் லீ தெரிவித்தார்.

நேற்று அதிகாலை, தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் 33.6-ராவது கிலோ மீட்டரில் இவ்விபத்து நிகழ்ந்தது.

Perodua Myvi கார் ஒன்று பழுதாகி இடதுபுறத் தடத்தில் நின்றிருந்தபோது, அதற்கு உதவுவதற்காக பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டி வந்த Naza Citra கார் முன்னால் நிறுத்தப்பட்டது.

அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று Myvi காரைத் தவிர்க்க முடியாமல் மோதியதோடு, வெளியே நின்றிருந்த அந்த ஆடவரையும் மோதித் தள்ளியது.

இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

Toyota Alphard வாகனமும் சம்பந்தப்பட்ட இந்த விபத்து, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!