
கோலாலம்பூர், அக்டோபர்-18 – ஜோகூரில் மின் விநியோகம் நீண்ட நேரம் பாதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலை தெனாகா நேஷனல் பெர்ஹாட் – TNB திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு Kangkar Tebrau முக்கிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், ஜொகூர் ஜெயா, பண்டார் டத்தோ ஓன், தாமான் டாயா, கெம்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
எனினும், துரித நடவடிக்கையின் மூலம் வெறும் 77 நிமிடங்களில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு TNB தொழில்நுட்ப ஊழியர்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலையும் சீராக உள்ளது.
இந்நிலையில், மின்தடை குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ TNB CareLine தளங்களை மட்டும் நாடுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையுடன் இணைந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மின் விநியோகப் பணியின் போது பொது மக்கள் காட்டிய ஒத்துழைப்புக்கு TNB நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.



