Latestமலேசியா

சண்டாக்கான் கடற்பகுதியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சபாவின் கிழக்குக் கரையில் அதிர்வுகள் உணரப்பட்டன

சண்டாக்கான், அக்டோபர்-7 – சபாவின் சண்டாக்கான் கடற்பகுதியில் நேற்றிரவு ரிக்டர் அளவுகோலில் 5.0 அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கம் நேற்றிரவு 9.11 மணியளவில் பதிவானது.

 

அதன் மையப்பகுதி லாஹாட் டத்துவிலிருந்து சுமார் 48 கிலோ மீட்டர் கிழக்கே, கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

 

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபாவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டன.

 

சேதமேதும் பதிவாகா விட்டாலும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக MetMalaysia தெரிவித்துள்ளது.

 

கடந்த 2 வாரங்களில் சபாவில் பதிவான தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களுக்குப் பின்னர் இந்த 5.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 26-ஆம் தேதி Kuamut பகுதியில் 3.3 அளவிலான நிலநடுக்கமும், 3 நாட்களுக்கு முன்பு ரானாவில் 3.5 அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!