Latestவிளையாட்டு

உலகக் கிண்ண மற்றும் ஆசிய கிண்ண தகுதி சுற்று காற்பந்து போட்டி – தைவான் குழுவை மலேசியா வீழ்த்தியது

தைப்பே, நவ 22 – 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தகுதிச் சுற்றுக்கான காற்பந்து போட்டியில் நேற்று தைப்பேயில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 1- 0 என்ற கோல் கணக்கில் தைவானை வீழ்த்தியது. ஹரிமாவ் மலாயா குழுவின் வெற்றிக்கான அந்த ஒரே கோலை 72ஆவது நிமிடத்தில் டேரன் லோக் அடித்தார். D பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் மலேசியாவுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த வியாழக்கிழமையன்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா ஏற்கனேவே 4- 3 என்ற கோல் கணக்கில்
கிர்கிஸ்தான் அணியை வீழ்த்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!