Latestசிங்கப்பூர்

318,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய வைர மோதிரத்தை மாற்ற முயன்றவர் கைது

சிங்கப்பூர், நவ 22 – 318,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய வைர மோதிரத்தை மற்றொரு பிரதியுடன் மாற்ற முயன்றதாகக் கூறப்படும் நபர் சிங்கப்பூர் “Marina Bay Sands”-சில் உள்ள ஒரு கடையில் கைது செய்யப்பட்டார். திங்கள்கிழமை பிற்பகல் Bayfront Avenu- வில் உள்ள ஒரு கடையில் ஏமாற்ற முயன்ற அந்த ஆடவர் குறித்து சிங்கப்பூர் போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளனர். வைர மோதிரத்தை வாங்குவது போல் நடித்த 43 வயதான அந்த ஆடவர் அதனை தனது இடது கையில் பிடித்து, ஊழியர்களின் கவனத்தை மற்ற மோதிரங்களின் மீது திருப்பினார்.

ஊழியர்கள் திரும்பிப் பார்த்தபோது, ​​​​அந்த நபர் தனது வலது கையைப் பயன்படுத்தி வைர மோதிரத்தை ஒரு பிரதியுடன் மாற்றினார். பிரதி மோதிரத்தின் விலை வித்தியாசமான அமைப்பில் இருந்ததை உணர்ந்து, நகைக்கடை ஊழியர்கள் முரண்பாட்டை கண்டறிந்து நகைக்கடையின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் வைர மோதிரத்தோடு இருந்ததைத் தொடர்ந்து அந்த நகை கடையிலேயே கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மோசடி குற்றத்திற்காக அவர் மீது இன்று குற்றச்சாட்டு கொண்டு வரப்படவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!