
வாஷிங்டன், ஏப்ரல்-1 – ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலை ஆதரிக்காத நாடுகள், எண்ணெயை அமெரிக்காவிடம் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும். இல்லையேல் அல்லது வேறு எங்காவது பெற்றுக்கொள்ளட்டும் அல்லது அவர்களே நேரடியாக ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று எடுத்துக்கொள்ளட்டும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.
ஈரானைச் சுற்றியுள்ள பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான Hormuz நீரிணையில் மருட்டல்கள் தொடருகின்றன. அதனால் எண்ணெய் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளதோடு கையிருப்பு கிடைப்பதும் பிரச்சனையாகியுள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால், அனைத்துலக உறவுகள் மேலும் பதற்றமடையலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில்தான், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை சில ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்காதது ட்ரம்ப்-பை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த விரக்தியைத் தான் ட்ரம்ப் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.



