
கிள்ளான், செப்டம்பர்-26, குளோபல் இக்வான் நிறுவனம் நடத்தி வரும் சமயப் பள்ளியியொன்றில் 3 சிறார்களை பிரம்பால் அடித்து வைரலான ஆசிரியருக்கு, பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அச்சிறார்களில் ஒருவரின் நெஞ்சை கால் முட்டியால் பலங்கொண்டு அழுத்தியது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து, 23 வயது Muhammad Barur Rahim Hisam-முக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது.
சமயப் பள்ளியின் வார்டனுமான அவ்விளைஞர் இவ்வாண்டு ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வட கிள்ளான், புக்கிட் ராஜாவில் உள்ள 2 வளாகங்களில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
சிறுவன் ஒருவன் சித்ரவதை செய்யப்படுவதை காட்டும் வீடியோ வைரலானதை அடுத்து செப்டம்பர் 16-ம் ஆம் தேதி போலீஸ் விசாரணையைத் தொடங்கியது.
இளைஞர் ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்பதால் அச்சிறுவன் பயத்தில் அழுவதையும் அவ்வீடியோவில் காண முடிந்தது.