Latestமலேசியா

ஜோகூர், என்டாவ் சட்டமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கினார் ; MPV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது

மெர்சிங், ஏப்ரல் 2 – என்டாவ் சட்டமன்ற உறுப்பினர் அல்வியா தாலிப் விபத்தில் சிக்கினார்.

நேற்று மாலை மணி 5.30 வாக்கில், ஜாலான் கோத்தா திங்கி – மெர்சிங் சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.

ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் அல்வியாவின் கணவர் செலுத்திய, நிசான் செரீனா ரக MPV வாகனம், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை, மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.

அவ்விபத்தில், அல்வியா கன்னம் மற்றும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு 19 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!