2022 கற்பழிப்பு சம்பவம்: சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர், பிப்ரவரி-4-2022-ஆம் ஆண்டு ஒரு வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்ததாகக் கூறி, மலேசிய ஆடவர் சிங்கப்பூரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் அருகே இருந்த புதரில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, 48 வயது ஷர்வீன் ஷெட்டி 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
அவற்றில் ஒன்று வாய்வழிப் புணர்ச்சிக்குக் கட்டாயப்படுத்தியதாகும்.
சம்பவத்தின் போது போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்ததாக மூன்றாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
அப்போது அவர் SBS Transit போக்குவரத்துக் கழகப் பணியாளராக இருந்துள்ளார்.
2022 ஜூலை 11 இரவன்று சம்பவ இடத்தில் ரோந்துப் பணியில் இருந்த ஷர்வீன், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நெருங்கி, அவர்களிடம் அடையாள ஆவணங்களைக் கேட்பது போல் பாசாங்கு செய்தார்.
பின்னர், அதில் பாதிக்கப்பட்டவரான 35 வயது பெண்ணை புதர் பக்கமாகத் தனியாகக் கூட்டிச் சென்று திடீரென முத்தமிட்டார்.
பின்னர் வாய்வழிப் புணர்ச்சிக்கு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி, அவர் கற்பழித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
முதலில் மறுத்த அப்பெண், இணங்கவில்லை என்றால் சிங்கப்பூரில் இனியும் வேலை செய்ய முடியாது என மிரட்டப்பட்டதால், வேறுவழியின்றி அவ்வாடவர் சொன்னதை செய்ய வேண்டியதாயிற்று என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



