Latestமலேசியா

சன்வே மெகா ரோட்ஷோ 2026 இப்போது முழுமையாக டிஜிட்டல் வடிவில்

கோலாலாம்பூர், மார்ச்-25 – சன்வே குழுமத்தின் ‘சன்வே மெகா ரோட்ஷோ 2026’, பெரிய அளவில் அதுவும் முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் இவ்வாண்டு திரும்பியுள்ளது.

மார்ச் 13 முதல் ஏப்ரல் 14 வரை, இந்த பிரச்சார இயக்கம் Sunway Super App செயலியில் மட்டும் நடைபெறுகிறது.

பயனர்கள், உலகின் எந்த மூலையிலிருந்தும், ஒரு சில கிளிக்குகளிலேயே Suway City kuala Lumpur-ரின் அனுபவங்களை ஆராய்ந்து, சிறப்பு சலுகைகளைப் பெற முடியும்.

Mega Hour Flash Sales விற்பனை ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, 1 ரிங்கிட்டில் தொடங்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தவிர, முதன் முறையாக, நேரடி ஷாப்பிங் அனுபவங்கள், பிரபல தொகுப்பாளர்களான Daphne Iking மற்றும் அர்விந்த் குமார் நடத்தும் நேரடி ஒளிபரப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சன்வே குழும நிறுவனங்களான Sunway Resort Hotel, Sunway Lagoon Hotel, Sunway Pyramid Hotel ஆகியவற்றில் சிறப்பு staycation சலுகைகளும் உண்டு; அதாவது குடும்பங்களுக்கு ஏற்ற வார இறுதி brunch உணவுகள், குழந்தைகளுக்கு இலவச உணவு போன்ற வசதிகள் அங்கு வழங்கப்படுகின்றன.

Sunway Sanctuary-யில் 50% வரை தள்ளுபடி கொண்ட பிரீமியம் சொகுசு தங்குமிட சலுகைகள் வழங்கப்படும் அதே வேளை, buffet முறையிலான Rasa Tradisi இரவு உணவுகளை சிறப்பு கழிவு விலையில் பெறலாம்; அல்லது பிறந்த குழந்தை மற்றும் தாய்மார்களுக்கான 28 -நாள் Postnatal Retreat பராமரிப்புத் திட்டத்தையும் தேர்வுச் செய்யலாம்.

இதனிடையே, Sunway Property வழியாக, Sunway Serene 2, Sunway Flora 2, Sunway Cochrane போன்ற புதிய குடியிருப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

புதிய வீடு வாங்குபவர்களுக்கு RM5,000 வரை கழிவுச் சலுகை மற்றும் Sunway Property+ உறுப்பினர் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதே சமயம், Sunway Medical Centre வழியாக, 15% வரை தள்ளுபடி கொண்ட சுகாதார பரிசோதனை பேக்கேஜ்கள், ஹோட்டல் தங்கும் வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேல் தகவல்களுக்கு உடனே Sunway Super App செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது பின்வரும் இணையத் தளங்களை வலம் வாருங்கள்.
• superapps.sunwaythemeparks.com
• sunwaylagoon.com/sunwaymegaroadshow2026
• sunwaylostworldoftambun.com/sunwaymegaroadshow2026

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!