
மலாக்கா – ஆகஸ்ட்-2 – ஓரினப் புணர்ச்சி மற்றும் குழுவாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில், மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையும் போலீஸும் இணைந்து 3 ஆடவர்களை கைதுச் செய்துள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் வந்த புகார்களின் அடிப்படையில், முறையே 21, 24, 26 வயதுடைய அம்மூவரும் கைதாகினர்.
1991-ஆம் ஆண்டு மலாக்கா மாநில ஷாரியா சட்டத்தின் கீழ், ஓரினப் புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சிக்கு முயன்றது, இயற்கைக்கு மாறான பாலுறவு ஆகியக் குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட செயல்கள் இஸ்லாமிய சட்டத்தை மீறுவதோடு, மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பரவி, தழுவி வரும் ஒரு வக்கிரமான வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக, கல்வி, உயர் கல்வி மற்றும் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Rahmad Mariman கூறினார்.
“லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர் மற்றும் திருநங்கை கலாச்சாரம் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார் அவர்.