
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-22-பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசத்தை ஒட்டி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில், மலேசியர்களுக்கு இலவச ஃபெரி படகு சேவை வழங்கப்படுகிறது.
பட்டவொர்த்தில் உள்ள Sultan Abdul Halim முனையம் முதல் தீவில் உள்ள Raja Tun Uda டெர்மினல் வரை இரு வழி பயணத்தை இந்த இலவச சேவை உள்ளடக்கியிருக்கும்.
ஜனவரி 31 அதிகாலை 12 மணி தொடக்கம் பிப்ரவரி 1 இரவு 11.30 மணி வரையிலும், பின்னர் பிப்ரவரி 1 அதிகாலை 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரையிலும் இச்சேவை வழங்கப்படும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பினாங்கிற்கு படையெடுக்கும் நிலையில், இந்த இலவச சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, எளிதான பயணத்தை உறுதிச் செய்ய முடியும் என, பினாங்கு துறைமுக ஆணையமும் பெனாங்கு துறைமுக நிறுவனமும் கூறின.
என்றாலும், உச்ச நேரங்களில் படகுகள் நெரிசலாக இருக்கக்கூடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



