Latestஉலகம்

பெங்களூருவில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டே மடிக்கணினியில் Zoom Meeting-கில் பங்கேற்ற ஆடவர் வைரல்

பெங்களூரு, மார்ச் 29 – இந்தியா கர்நாடகாவில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டே மடிக்கணினியில் Zoom Meeting-கில் ஆடவர் பங்கேற்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள சாலையொன்றில் அவ்வீடியோ எடுக்கப்பட்டுள்ளது Instagram பதிவில் தெரிகிறது.

Zoom Meeting-கில் பிசியாக இருந்தவரை பின்னால் வந்த ஆடவர் கவனித்து வீடியோவைப் பதிவுச் செய்துள்ளார்.

அதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டினாலும், அது ஓர் ஆபத்தான செயல் என கண்டித்தனர்.

என்ன தான் அவசரக் கூட்டமாக இருந்தாலும் அதற்காக இப்படியா சாலையில் உயிரைப் பணையம் வைப்பது? என பலர் கேட்கின்றனர்.

இது Work From Home அல்ல Work From Road என இன்னொருவர் நகைப்புடன் கருத்துப் பதிவேற்றியுள்ளார்.

அச்செயல் அவருக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தாது; சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிருக்கும் தான். எனவே போலீசார் அவருக்கு சம்மன் வழங்க வேண்டும் என்றும் பலர் கருத்துரைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!