
பெய்ஜிங், டிசம்பர்-7, சீனாவின் குவான் டோங் (Guangdong) பிரதேசத்தில் மருத்துவமனையொன்றின் புதிய வளாகத்தில் கூரை சரிந்து விழுந்ததில்,வெளி நோயாளிகள் நால்வர் காயமடைந்தனர்.
டிசம்பர் 5-ஆம் தேதி கட்டுமானக் குழு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
பராமரிப்புப் பணிகளுக்காக, முதல் மாடியில் வெளி நோயாளிகளுக்கான மருந்தகத்தின் முன்புள்ள கூரையின் மீது, தொழிலாளர் ஒருவர் ஏறியுள்ளார்.
அப்போது திடீரென சரிந்த கூரை, மருந்துகளை எடுப்பதற்காக காத்திருந்த நால்வர் மீது விழுந்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஏற்பாடு செய்தது.
ஒருவருக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்ற மூவருக்கு சிறிய மென்மையான திசு காயங்கள் ஏற்பட்டன; காயம் அடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
முறையற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமலேயே பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியது அச்சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கூரை சரிந்து நோயாளிகள் மீது விழும் CCTV காட்சிகள் வைரலாகியுள்ளன.