Latestமலேசியா

ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் சிறந்த ஆசிரியர் விருதை தீபன்ராஜ் பெற்றார்

ஜோகூர் பாரு, ஜன 6 – ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் Taman Sutera தேசிய இடைநிலைப் பள்ளியின் ஆசிரியரான தீபன்ராஜ் சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார். அறிவியல் மற்றும் பல்லூடக ஆசிரியரான 33 வயதுடைய அவர், தொழில்நுட்பம், கற்றல் மற்றும் புத்தாக்கம் அடிப்படையிலான திட்டங்கள் மூலம் மாணவர்களுடன் 42 புத்தாக்க திட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான நிலத்தடி டிரோன் திட்டம் , கோழி வளர்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண, ‘ஸ்மார்ட் கோழி தீவன’ திட்டம் , மாணவர்கள் தங்களது நேரத்தை திறம்படி நிர்வகிக்க உதவும் Wise Time Project , சுற்றுச் சூழலை கண்காணிக்கும் froggy IOT திட்டமானது ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் Internet of Things (IOT)’ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கண்காணிக்கும், குறிப்பாக நீரின் தரத்தைக் கண்காணிப்பது போன்ற புத்தாக்க திட்டங்களுக்காக தீபன்ராஜ் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

இதனிடையே கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட மலேசிய ஆசிரியர் தூதர் திட்டத்திலும் தீபன்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருப்பதுடன் நாட்டின் பெயரை அனைத்துலக நிலையில் அறியச் செய்ய தமக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இதற்காக தாம் பெருமைப்படுவதாகவும் தீபன்ராஜ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!