Latestஉலகம்

அமெரிக்காவில் மனைவி – மகன் முன்னிலையில் இந்திய வம்சாவளி ஆடவர் தலைத் துண்டிப்பு

டல்லாஸ், டெக்சஸ், செப்டம்பர்-12 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் டல்லாஸில் (Dallas) நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயது ஆடவர், தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலைத் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தியா, கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட Chandra Nagamallaiah, Downtown Suites மோட்டல் நிர்வாகியாக உள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளான நேற்று, மோட்டல் பணியாளரான 37 வயது Yordanis Cobos-Martinez என்ற கியூபா (Cuban) குடியேறியுடன் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

உடைந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என Nagamallaiah கூறியதால் ஆத்திரமுற்ற பணியாளர், அவரை துரத்தித் துரத்தி தாக்கினான்.

Nagamallaiahயாவை அவ்வாடவன் கத்தியால் குத்துவதும் பின்னர் தலையைத் துண்டித்து தலையில் உருட்டி விடும் கோரக் காட்சிகள் CCTV –யில் பதிவாகி வைரலாகியுள்ளது. 

Nagamallaiahயாவை அவரது மனைவி மற்றும் 18 வயது மகன் காப்பாற்ற முயன்றும் தோல்வியடைந்தனர்.

 துண்டிக்கப்பட்ட தலையைக் கொலையாளி சர்வசாதாரணமாக கையில் தூக்கிச் சென்று குப்பையில் போட்டான்; அவனை உடனடியாகக் கைதுச் செய்த போலீஸ் ஜாமீனில் வெளிவராத படி சிறையில் அடைத்துள்ளது.

நாகமல்லையாவின் கொடூர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த Houston இந்தியத் துணைத் தூதரகம், குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சிறுபான்மை இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறைகள் தொடருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!