Latestமலேசியா

கரையில் மோதிய டேங்கர் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது

லூமுட், நவ.17-பேராவில் Madani Esplanade Wing பொழுதுபோக்குப் பூங்கா அருகே கரை தட்டி நின்ற MT MIDAS டேங்கர் கப்பல், நேற்று வெற்றிகரமாக இழுத்துச் செல்லப்பட்டது. தற்போது அக்கப்பல் Tanjung Batu Agas கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர உதவிக்காக அப்பகுதியில் இழுவைக் கப்பல் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் துறையான JLM தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த அச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், சம்பவ இடத்தில் எண்ணெய் கசிவோ தூய்மைக்கேடோ ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கப்பல் கரையில் மோதியதில் அருகிலிருந்த நடைபாதையை ஒட்டிய பகுதி சேதமடைந்ததாக நேற்று காவல் துறை உறுதிப்படுத்தியிருந்தது. கப்பலில் 10 தாய்லாந்து நாட்டினர் இருந்ததாகவும், அது இதற்கு முன் Fuji என அழைக்கப்பட்டதாகவும் Manjung மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் Hasbullah Abdul Rahman தெரிவித்தார்.

அக்கப்பல் பின்னர் புதிய தாய்லாந்து உரிமையாளரிடம் கைமாறி, ‘Midas’ எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். சரக்குகள் ஏதுமின்றி இருந்த அக்கப்பல், உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி கடல் சோதனையில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!