
சென்னை, ஜனவரி 13 – கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், தமிழக வெற்றி கழகம் (TVK) அல்லது அதன் நிர்வாகிகள் யாரும் இதற்குப் பொறுப்பல்ல என்று அதன் கட்சி தலைவர் மற்றும் நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று, நடைபெற்ற விசாரணை ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, தனது இருப்பால் கூட்டத்தில் குழப்பம் மற்றும் பரபரப்பு ஏற்படலாம் எனக் கருதி தான் நிகழ்ச்சி இடத்தை விட்டு வெளியேறியதாக விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு முன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட TVK நிர்வாகிகளும், இந்த சம்பவத்தில் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலங்கள், நடிகர் விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என போலீஸ் முன்பு தெரிவித்துள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



