
காசா, அக்டோபர்-29,
அமைதி உடன்படிக்கையை சிதறடிக்கும் விதமாக
காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
தொடரும் தாக்குதல்களால் மக்கள் பாதிப்புக்களில் உள்ளனர்; மருத்துவ சேவைகள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வழக்கம் போல் ஹமாஸ் போராளி கும்பல் மீது இஸ்ரேல் பழியைப் போட்டுள்ளது.
அதாவது அமைதி ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தான் முதலில் இஸ்ரேலிய இராணுவத்தைத் தாக்கியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாங்கள் திருப்பித் தாக்கியதாகவும் அது கூறிக்கொண்டது.
ஹமாஸோ அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இவ்வேளையில், இதுவொரு சிறிய மோதலே என்றும், அமெரிக்கா முன்னெடுத்த போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னமும் அமுலில் இருப்பதாவும் அதன் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.



