
கோலாலம்பூர், அக்டோபர் 9 – ஷா ஆலமிலுள்ள கோத்தா கெமுனிங் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆடவரின் சடலத்தைக் காவல்துறை இன்று மீட்டுள்ளது.
இன்று அதிகாலையில், அந்த ஏரியின் அருகில் தனது வாகனத்தை நிறுத்திய ஒருவரின் கண்ணில், அந்த சடலம் தென்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த சடலத்தில் எந்த காயங்களும், இறந்தவரின் அடையாளங்களும் கண்டறியப்படவில்லை என்று ஷா ஆலம் காவல்துறை கூறியுள்ளது.