Latestமலேசியா

95.5% மாணவர்களுக்கு ADTEC JTM வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தியுள்ளது – ரமணன்

ஷா ஆலாம், ஜனவரி-14-ஆள்பலத் துறையான JTM, தனது ADTEC கட்டமைப்பு வாயிலாக MABES எனப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட்டின் பொறியியல் சேவையுடன் வியூகப் பங்காளித்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துகொண்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு வாயிலாக பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதால் JTM மாணவர்களுக்கு மிகப்பெரிய நன்மையை வழங்குவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

2010 முதல் 2026 வரை, 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிப் பெற்றுள்னர்; அவர்களின் வேலைவாய்ப்பு விகிதமும் 95.5 விழுக்காடாகப் பதிவாகி, நிறுவனங்களின் திருப்தி அளவும் 97.2 விழுக்காட்டை அடைந்திருப்பதாக ரமணன் சொன்னார்.

அடுத்த கட்டமாக, 2026 முதல், RM20 மில்லியன் மதிப்பில் விமானப் பயிற்சித் தளமொன்று ஷா ஆலாமில் கட்டப்படும்.

இது MABES-சுடன் இணைந்த பயிற்சிகளையும், தொடர்புடைய தொழில் சான்றிதழ்களையும் ஆதரிக்கும் என, நேற்று ADTEC வளாகத்திற்கு வருகை தந்தபோது ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!