Latestமலேசியா

Waze வழிகாட்டுதலைப் பின்பற்றிய சுற்றுலாப் பேருந்து மேம்பாலத்தின் அடியில் சிக்கியது; இருவர் காயம்

பட்டர்வொர்த், நவம்பர்-1,பினாங்கு, பட்டர்வொர்த்தில் Waze வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று, மேம்பாலத்தின் அடியில் சிக்கி விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 9 மணியளவில் Taman Bagan-னில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்ததில் இரு பயணிகள் இலேசான காயமடைந்தனர்.

ஜோகூரிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, பட்டவொர்த்தால் அருகிலுள்ள தங்கும் விடுதிக்குச் சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியின் சாலை அமைப்பு குறித்துத் தெரியாததால், Waze வழிகாட்டுதலை முழுமையாக நம்பிச் சென்றதாகப் பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மேம்பாலத்தின் கீழ் செல்லும் வாகனங்களுக்கான அதிகபட்ச உயரம் 2.6 மீட்டர் என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!