
கோத்தா திங்கி, அக்-27-ஜோகூர், Felda Lok Heng Selatan பகுதியில், குடியிருப்பாளர் ஒருவரை வெட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கு மாயை மற்றும் மனநலப் பிரச்சினைகள் இருந்ததாக அவரது மூத்த சகோதரி தெரிவித்துள்ளார். தமது சகோதரத் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் கடைசியாக மனநல சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொண்டதாக 54 வயதான அவர் கூறினார்.
As எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அம்மாது, தமது சகோதரருக்கு மாயைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் Tampoi, Permai மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டதாகவும், மருத்துவமனை வழங்கிய மருந்துகளை அவர் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உட்கொண்ட பின்னர் நிறுத்திவிட்டதாகவும் அம்மாது குறிப்பிட்டார்.
தமது சகோதரர் கிராமத்தில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்ததாகவும், பொதுவாக யாருக்கும் தொந்தரவு கொடுத்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார். பெற்றோர் காலமானதைத் தொடர்ந்து, தமது சகோதரர் பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், உணவு அல்லது பிற தேவைகள் ஏற்பட்டால் தன்னைத் தொடர்பு கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். சம்பவம் குறித்து மக்கள் திரண்ட பின்னரே தமக்கு விவரம் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று சந்தேக நபர் கோடரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குடியேற்றக்காரர் ஒருவரைத் தாக்கியதில் அவர் மரணமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அச்சம்பவம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சாலையோரத்தில் நிகழ்ந்தது. சந்தேக நபர் பின்னர் குடியிருப்புக்கு அருகிலுள்ள பழத்தோட்டப் பகுதியில் பிடிபட்டார்.
அதன் தொடர்பில் கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஊடக அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



