Latestமலேசியா

அக்மால் சாலேவுக்கு எதிரான அவதூறு வழக்கில் தெரசா கோக் வெற்றி; இழப்பீடு, வழக்குச் செலவாக RM300,000 வழங்க உத்தரவு

மலாக்கா, அக்டோபர்-20,ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கில், செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிற்கு ஆதரவாக மலாக்கா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே, தெரசாவுக்கு 250,000 ரிங்கிட் இழப்பீடும், 50,000 ரிங்கிட் செலவுத் தொகையும் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024-ஆம் ஆண்டு, பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் வழங்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்கும் பரிந்துரையை தெரசா கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அக்மால் சாலே, அவரைத் தரக்குறைவாக விமர்சித்ததுடன், அவரது நெற்றியில் ‘ஹலால் அல்லாதது’ என்ற முத்திரையை ஒட்ட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகள் அவதூறானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பதிவுகளை 7 நாட்களுக்குள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கவும், இதுபோன்ற அவதூறான கருத்துகளை மீண்டும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்பை வரவேற்ற தெரசா கோக், கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கான உரிமை அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது கட்சிக்காரருடன் ஆலோசிக்கவிருப்பதாக அக்மாலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!