Latest

அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் – டிரம்ப்

வாஷிங்டன், மே 20 – ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என்றும், தாக்குதல் நடத்த முடிவெடுப்பதற்கு “ஒரு மணி நேரம்” மட்டுமே இருந்த நிலையில் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் ஒரு புதிய முன்மொழிவை முன்வைத்த பின்னரே, தாக்குதலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று தாக்குதல் நடத்த முடிவெடுப்பதற்கு நான் ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளேன் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும், ஈரானியத் தலைவர்கள் தற்போது ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் சில நாட்களுக்குள் புதிய தாக்குதலை அமெரிக்கா நடத்தக்கூடும் என டிரம்ப் எச்சரித்தார்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு, வாஷிங்டனும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா தற்போது சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

முன்னதாக, தெஹ்ரானுடனான உடன்பாடு கையெழுத்தாகும் தருவாயில் இருப்பதாக டிரம்ப் பலமுறை கூறிவந்தாலும், அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்துவோம் என்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!