Latestமலேசியா

அதிகாரப்பூர்வத் தகவல்களை நம்புங்கள்; உறுதிப்படுத்தாத தகவல்களைப் பரப்பாதீர் – ஃபாஹ்மி

கோலாலம்பூர், அக்டோபர்-24,பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் தாக்கல் செய்த 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

குறைந்த வருமானம் பெறும் B4 மக்கள் தொடங்கி நடுத்தர வருமானம் பெறும் M40 வரையிலான மக்கள் கொண்டாடும் வகையில் ஏராளமான அனுகூலங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் பிரதான ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வத் தரப்புகளிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், அவதூறுகள் மற்றும் போலித் தகவல்களை எளிதில் நம்பவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

வரவு செலவுத் திட்டம் குறித்த முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு _belanjawan.mof.gov.my_ என்ற நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!