Latestமலேசியா

அதிகாலையில் சமயப் பள்ளியில் திருட்டு – இருவருக்குப் போலீஸ் வலைவீச்சு

குவாலா சிலாங்கூர், நவம்பர் 2 – தஞ்சோங் காராங்கிலுள்ள (Tanjong Karang) தனியார் சமயப் பள்ளியில் நேற்று அதிகாலை இருவர் புகுந்து பணத்தைத் திருடியதுடன், அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதிகாலை சுமார் 5.45 மணியளவில் கடை கட்டிடத்தில் இயங்கும் பள்ளியின் ஓர் அறைக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக காலை 11.30 மணியளவில் போலீசாருக்குப் புகார் கிடைத்தது.

குவாலா சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பரிண்தெண்டன் அசஹாருடின் தாஜுடின் (Azaharudin Tajuddin) கூறுகையில், அடையாளம் காணப்படாத இரு ஆடவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பணம் மட்டுமே திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திருடப்பட்ட தொகை இன்னும் கணக்கிடப்படவில்லை.

இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. பள்ளியின் முகநூல் பதிவின்படி, திருட்டு மற்றும் சேதம் காரணமாக சுமார் 8,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!