Latestஉலகம்

அனாக் கிராகாத்தாவ் எரிமலை சீற்றம்: இந்தோனேசியாவில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஜகார்த்தா, செப்டம்பர்-11,அண்மையில் வெடித்துச் சிதறிய அனாக் கிராகாத்தாவ் எரிமலை இரண்டாவது உயர் மட்ட எச்சரிக்கை நிலையில் நீடிப்பதால், இந்தோனேசியாவின் Lampung கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

​சுண்டா நீரிணையில் உள்ள தெற்கு Lampung கடலோரப் பகுதிகளில் வெளியேற்றப் பாதைகள், பாதுகாப்பான மையங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கைச் சைரன் ஒலி சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உறுதிச் செய்து வருகின்றனர்.

அதோடு, எரிமலைப் பள்ளத்தைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்ல மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

​இதற்கிடையில், பரவிய எரிமலைச் சாம்பல் காரணமாக Lampung, ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் 68,000-க்கும் மேற்பட்டோருக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

1,200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சுவாசக் கவசங்கள் மற்றும் மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!