தாய்லாந்து, ஜூன் 4 – தாய்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக நடன விழாவில் Yuvasshini Nayar Karunagaran மற்றும் Nawina Shri Karunagaran ஆகிய சகோதரிகள் Nirthya Ratna விருதை வாகை சூடியுள்ளனர்.
12 ஆண்டுகளாகப் பரத நடனத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள், பல போட்டிகளில் இணைந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
அவ்வகையில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ஏற்று நடத்திய Kalakshetra 5.0 நடன போட்டி, மலேசியாவின் வடக்கு மாநிலங்களின் பாரம்பரிய நடனப் போட்டி, உலக தமிழ் மன்றத்தின் பரத மேடை என பல போட்டிகளில் இவர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் Saurya Prabah எனும் தங்கப் பதக்க விருது, 2020ஆம் ஆண்டு இந்தியாவில் Nirtiya Maiyuri விருதுகளைப் பெற்று, இவ்வாண்டு தாய்லாந்தில் Nirthiya Ratna விருதையும் தன் வசமாக்கியுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை புத்தக்கத்திலும் 2021ஆம் ஆண்டு, இவர்களின் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.