Latestஉலகம்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஆயதொலா கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது

தெஹ்ரான், மார்ச்-1-ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி
கமேனி அமெரிக்கா–இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை, ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதையடுத்து 40 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என, தொலைக்காட்சிகளில் கண்கலங்கியவாறே செய்தியாளர்கள் அறிவித்தனர்.

ஆயதொலா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம், ஈரானிய உச்சத் தலைவராக 36 ஆண்டுகளாக வலம் வந்த ஆயதொலாவின் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.

இது மத்தியக் கிழக்கில் மட்டுமின்றி உலகளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!