Latestமலேசியா

அமெரிக்க பத்திரிகையாளர் விருந்தில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் game செயலிகளை உருவாக்கும் பொறியியலாளராம்

வாஷிங்டன், ஏப்ரல்-27-வாஷிங்டனில் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கைதானவன் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது Cole Thomas Allen என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

இவன் உயர் கல்வி கற்ற ஒரு மெக்கானிக்கல் பொறியியலாளர் மற்றும் கணினி விஞ்ஞானி ஆவான்.

Caltech போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

​Allen ஒரு பகுதிநேர ஆசிரியராகவும், சுயேட்சை Game Developer அதாவது வீடியோ விளையாட்டுச் செயலிகளை உருவாக்குபவராகவும் பணியாற்றி வந்துள்ளான்.

இவனது சமூக வலைத் தளப் பக்கங்கள், இவன் வேதியியல் மற்றும் வன்முறையற்ற விளையாட்டு வடிவமைப்புகளில் ஆர்வம் கொண்டவன் என்பதைக் காட்டுகின்றன.

இத்தகையப் பின்னணி கொண்ட ஒருவன் வன்முறையில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, Allen, ட்டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்களைப் பகிர்ந்துள்ளான்.

சம்பவத்தின் போது, துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் பாதுகாப்பு வளையத்தை மீற முயன்றபோது இவன் பிடிபட்டான்.

அந்தச் சமயத்தில் தன்னை ஒரு ‘நட்பு ரீதியான கூட்டரசு கொலையாளி’ (Friendly Federal Assassin) என்றும் Alenn கூறிக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தில் ட்ரம்ப் காயமின்றி தப்பினார்.

Allen மீது இன்றோ நாளையோ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்படவுள்ளன.

தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை கண்டறிய, மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!