Latestஉலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் இந்திய மாலுமிகள் மரணம் குறித்து எஸ். ஜெய்சங்கர் கடும் கண்டனம்

புது டெல்லி, ஜூன்-14 – அமெரிக்கக் கடற்படைத் தாக்குதலில் 3 இந்தியக் கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளது.

​​ஓமான் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை முற்றிலும் “நியாயமற்றது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் தொலைபேசி வாயிலாகத் தனது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Hormuz நீரிணை வழியாகச் செல்லும் ஈரானிய கச்சா எண்ணெய் கடத்தலைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு வாதிடுகிறது.

ஆனால், அப்பாவிப் பொது மக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது மரணத்தை விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும், இது தொடர்பாகப் புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதருக்கும் முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!