
லூய்சியானா, ஏப்ரல்-20,
அமெரிக்காவின் லூய்சியானா (Louisiana) மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு கோரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்தத் தாக்குதலில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Shreveport நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 வீடுகளில் புகுந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், ஒரு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்களைக் கொன்று குவித்தான்.
இதில் உயிரிழந்த சில குழந்தைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சொந்த வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் இரண்டு பெண்கள் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய குற்றவாளியைப் போலீஸார் துரத்திச் சென்றனர்.
போலீஸாருடனான மோதலின்போது அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தப் பயங்கர சம்பவத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் மாநில ஆளுநரும் கடும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மிக மோசமான படுகொலை எனக் கூறப்படுகிறது.



