Latestமலேசியா

அரசு மற்றும் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கவே Waze செயலிக்குத் தடை; பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், அக்டோபர்-22,இஸ்ரேலால் அரசாங்கத்தின் இரகசியத் தகவல்களும் பொது மக்களின் தனிப்பட்ட தரவுகளும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்த அரசாங்க ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Waze நிறுவனமானது இஸ்ரேலியச் சட்டங்களின் கீழ் செயல்படுவதால், அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களும் பயண விவரங்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் எனப் பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதிக்கும் வகையில், இத்தகைய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அது கூறிற்று.

தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

இதனிடையே, பொது மக்களும் Waze செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கியுள்ள TuJu எனும் உள்நாட்டு வழிகாட்டிச் செயலிக்கு மாறுமாறு அன்வார் அறிவுத்தியுள்ளார்.

என்றாலும், பொது மக்களுக்கு Waze பயன்பாட்டுக்கான சட்டப்பூர்வத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!