Latestமலேசியா

அரிசியும் உணவு பொருட்களும் கெட்டுவிட்டதால் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை – முன்னாள் எம்.பி

குவந்தான், ஏப் 19 – அரிசியும் , உணவு பொருட்களும் கெட்டுவிட்டதால் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாமல்போனதாக முன்னாள் எம்.பி டத்தோஸ்ரீ டாக்டர் Ismail Mohamed Said தெரிவித்திருக்கிறார். தெமர்லோ, Jalan Pintasan Rumpun Makmur , Kampung Gunung Senyum மில் அரிசி, சாடின், மாவு ஆகியவை வீசப்பட்டிருந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது. அந்த சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசியது தொடர்பாக ஏப்ரல் 5ஆம் தேதி புகாரையும் தாம் பெற்றதாக முன்னாள் உள்துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ Ismail Mohamed Said இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அரிசிக்குள் எலியின் எச்சங்கள் இருந்ததோடு பல்வேறு சமையல் பொருட்கள் மிகவும் மோசமாக கெட்டு விட்டதாகவும் அவர் கூறினார். அரிசியில் நிறைய பூச்சிகளும் இருந்ததால் வேறு வழியின்றி அவை கோழி வளர்ப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் Ismail Mohamad கூறினார்.

2004 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை தாம் Kuala Kurau நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பொதுமக்களின் தேவைக்கு வழங்குவதற்காக அந்த சமையல் பொருட்களும் அரிசியும் கையிருப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார் . கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலின்போது சொந்த மான்யத்தின் மூலம் அந்த சமையல் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்த பொருட்கள் எவரிடமும் விநியோகிக்கப்படவில்லையென Ismail Mohamad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!