Latest

பாலத்தில் கார் சிக்கிக் கொண்டதால் ஆடவர் ஆவேசம்; போலீஸ் சோதனையில் போதைப்பொருளுடன் சிக்கினார்

ஈப்போ, ஏப் 19 – பேராக் ஈப்போவில் காரொன்று குறுகலான பாலத்தில் சிக்கிக் கொண்டதில், ஆவேசமடைந்தவர் போல் அதன் ஓட்டுநர் செய்த ‘கவன ஈர்ப்பு’ நடவடிக்கையால் கடைசியில் போதைப்பொருளுடன் போலீசில் வசமாக சிக்கினார்.

குவாலா கிராயில் நேற்று காலை 8.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

கைதானவர், Perodua Myvi காரில் வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் என கெரியான் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Juna Yusoff தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் மட்டுமே நுழையக் கூடிய பாலத்தில் தனது கார் மாட்டிக் கொண்டதாகக் கூறி அந்நபர் பொது மக்களை நோக்கி கோபத்தில் தேவையில்லாமல் சத்தம் போட்டிருக்கிறார்.

சம்பவ இடம் விரைந்த ரோந்து போலீசார், அவ்வாடவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்; ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை.

சுயவிவரங்களைக் கேட்ட போதும் கொடுக்க மறுத்து விட்டார்.

வேறு வழியின்றி அவரை கைதுச் செய்ய முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சொந்தத் தொழில் செய்பவரான அவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போலீஸ் அவரை ஒருவழியாகப் பிடித்து சோதானையிட்டதில், அவரிடம் இருந்து ஒரு பிளாஸ்டிக்கில் போதைப்பொருள் கண்டடெடுக்கப்பட்டது.

சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

பாலத்தில் கார் மாட்டிக் கொண்ட போதே, பொது மக்கள் உதவியைக் கேட்டிருந்தால் அவர் ‘தப்பித்திருப்பார்’

தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து தனக்கு தானே அவர் வேட்டு வைத்துக் கொண்டதாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!