Latestஉலகம்

ஆக்ரா கொடூரம்: கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்த மனைவி கைது; 45 நாட்கள் நாடகமாடியது அம்பலம்

லக்னோவ், ஜூலை-4 – இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவனைக் கொலைச் செய்துவிட்டு, சடலத்தைக் குளியலறைத் தரையின் கீழ் புதைத்து நாடகமாடிய பெண் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

​ஆக்ராவைச் சேர்ந்த சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், அவரது மனைவி ரூபி, தன் கணவரைத் தேடுவது போல போலீஸுக்கு நாடகமாடி உதவி வந்துள்ளார்.

மேலும், கணவர் காணாமல் போன சோகத்தில் இருப்பதாகக் கூறி அண்டை வீட்டாரிடமும் அழுது புலம்பியுள்ளார்.

​இந்நிலையில், சுரேந்திர சர்மாவின் சகோதரருக்கு ரூபியின் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், ரூபியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

​இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், வீட்டின் குளியலறைத் தரையை உடைத்து, அதன் கீழ் புதைக்கப்பட்டிருந்த சுரேந்திர சர்மாவின் சடலத்தைக் மீட்டெடுத்தனர்.

இந்த கொடூரக் கொலையில் ரூபிக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்ற கோணத்தில் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!