
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X தளத்தில் தன்னைப் பின் தொடர்பவர்களுக்கு அவர் பாலியல் உறவு ‘சேவையையும்’ வழங்கி வந்துள்ளார்.
கணவருடன் கூட்டுசேர்ந்து, கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து இதை ஒரு தொழிலாகவே அம்மாது செய்து வந்திருப்பதாக, கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா கூறினார்.
அம்மாதுவும் அவரின் கணவரும், நேற்று ஷா ஆலாம், செக்ஷன் 27-ல் உள்ள ஹோட்டலில் கைதாகினர்.
டெலிகிராம் வாயிலாக ‘வாடிக்கையாளர்கள்’ அம்மாதுவைத் தொடர்புகொண்டதும், ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கான link இணைப்பு அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
அதற்கு 50 முதல் 150 ரிங்கிட் வரையில் கட்டணம் விதிக்கப்படுகிறது; அதே சமயம், ஷா ஆலாமில் உள்ள 4 நட்சத்திர ஹோட்டலில் 450 முதல் 800 ரிங்கிட் வரையிலான கட்டணத்தில் உடலுறவு சேவையும் அம்மாது வழங்கி வந்துள்ளார்.
இதன் மூலம் அத்தம்பதியர் வாரந்தோறும் 3,200 முதல் 6,400 ரிங்கிட் வரையில் வருமானம் பார்த்து வந்துள்ளனர்.
ஆபாச உள்ளடக்கங்களுக்கு இணையப் பரிவர்த்தனை அல்லது QR குறியீடு மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அதுவே உடலுறவுக்கு ரொக்கமாகவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
வருமானத்தைத் தங்களுக்குள் பங்கிட்டு வந்த கணவனும் மனைவியும், விசாரணைகளுக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.